ஆர்ஜென்டீன கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம் பேசியது பற்றி கேப் வெர்டே கோல்கீப்பரின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லியோனல் மெஸ்ஸி கேப் வெர்டே வீரர்களை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் நாங்கள் மிகவும் சவலான ஆட்டத்தை அளித்ததாகவும் கோல்கீப்பர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மிகச் சிறிய தீவு நாடான கேப் வெர்டே இந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகி அனைவரையும் மூக்கின்மேல் விரல் வைக்கும்படி விளையாடினார்கள். குறிப்பாக அதன் கோல்கீப்பர் ஹோசின்யா (40 வயது) கால்பந்து ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றார். ஒரு மில்லியனுக்கும் குறைவான ஃபாலோயர்களை வைத்திருந்த இவருக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது 20 மில்லியன் ஃபாலோயர்கள் வந்தடைந்துள்ளார்கள். ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 2-3 எனத் தோல்வியுற்றது. இருப்பினும் கூடுதல் நேரம் வரைக்கும் சென்ற இந்தப் போட்டியில் ஹோசினியா 8 கோல்களை தடுத்து அசத்தினார். போட்டிக்குப் பிறகு மெஸ்ஸியைச் சந்தித்து தான் பேசியது என்னவென்று கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டிக்குப் பிறகு மெஸ்ஸியிடம் சென்றேன். அவர் என்னைக் கட்டியணைத்து, “நீங்கள் சிறந்தவர். உங்கள் நாட்டு மக்கள் உங்களை நினைத்து பெருமைப்பட வேண்டும்” என்றார். எனக்கு இது நம்பமுடியாததாக இருந்தது. மெஸ்ஸியிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்கும்போது அது எனக்கு மிகவும் பெரியது. நான் அவருக்கு நன்றி சொன்னேன். ’நன்றி லியோ. நீங்கள்தான் சிறந்தவர்’ என அவரிடம் கூறினேன். பிறகு, நாம் ஆடையை மாற்றிக்கொள்ளலாமா எனக் கேட்டேன். பேட்டிக்குப் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்றார். இதுமாதிரியான தருணங்கள் இதயத்தில் எப்போதும் அழியாமல் இருக்கும் என்றார். கேப் வெர்டே உடனான போட்டி கடினமாக இருக்குமென முன்பே தெரியும்: மெஸ்ஸிcape verde Goalkeeper Vozinha reveals Lionel Messi told him, 'Your people should be proud of you'