பிரான்ஸில் கடும் வெப்பம்! ஒரே மாதத்தில் 2,025 பேர் பலி

Wait 5 sec.

பிரான்ஸில் சமீபகாலமாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஜூன் மாதத்தில் பிரான்ஸின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததால், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 2,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இறப்புகள் 29 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டோரிடையே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.மேலும், கடும் வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வரும் நாட்களில் ஐரோப்பா கண்டம் முழுவதும் மேலும் தீவிரமான வெப்பநிலையே நிலவும் என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 40 போ் உயிரிழப்புFrance records 30% surge in deaths amid Europe’s record-breaking heatwave