ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கேப் வெர்டே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். அமெரிக்காவின் இண்டர் மியாமி திடலில், இந்திய நேரப்படி காலை 3.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் 29ஆவது நிமிஷத்தில் லியோனல் மெஸ்ஸி அசத்தலான் கோல் அடித்தார். பின்னர், கூடுதல் நேரத்தில் கார்னர் கிக் மூலம் ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.இந்தப் போட்டியில் 3-2 என ஆர்ஜென்டீனா போராடி வென்றது. இதில் சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தப் போட்டியில் மெஸ்ஸி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 1. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். 2. உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (20) அடித்தவராக மெஸ்ஸி தனது சாதனையை நீட்டித்துள்ளார். 3. நடப்பு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (7) அடித்தவராகவும் சாதனை படைத்துள்ளார். 4. உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அசிஸ்ட்டுகள் (9) செய்து வரலாறு படைத்துள்ளார். கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டம்: கேப் வெர்டேவை போராடி வென்றது ஆர்ஜென்டீனா!Messi won the Man of the Match award along with several records!