பெட்ரோல், டீசல் விலை உயர்வால் குறைந்த செலவில் காரை இயக்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக தற்போது சிஎன்ஜி கார்கள் மாறி வருகின்றன. குறைந்த இயக்கச் செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் என்பதால், இந்த வகை கார்கள் மீது மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரூ. 10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய சிறந்த சிஎன்ஜி கார்கள்.. டாடா பன்ச் ஐ சிஎன்ஜி - இந்த கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினுடன் வரு இந்த மைக்ரோ எஸ்யுவி, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி அமைப்பைப் பெறுகிறது. இதனால் டிக்கி இடம் குறைவதில்லை. 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, உறுதியான அமைப்பு இதன் முக்கிய பலம். இதன் விலை ரூ. 7.10 லட்சம் முதல் 9.55 வரை உள்ளது. மாருதி சுசூகி பலேனோ சிஎன்ஜி - 1.2 லிட்டர் கே-சீரிஸ் டூயல்ஜெட் என்ஜினுடன் கிடைக்கும் பலேனோ சிஎன்ஜி விசாலமான கேபின் கொண்டுள்ளது. பிரீமியம் வசதிகளால் கவனம் ஈர்க்கிறது. 6 ஏர்பேகுகள், தானியங்கி குளிர்சாதன வசதி, தொடுதிரை, பொழுதுபோக்கு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை ரூ. 8.35 முதல் 9.35 லட்சம்மாருதி சுசூகி வேகன் ஆர் சிஎன்ஜி - 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கும் இந்த கார் நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. உயரமான கேபின், விசாலமான உட்புறம், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ. 6.45 லட்சம் முதல் ரூ. 6.95 லட்சம்ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி - 1.2 லிட்டர் இரட்டை எரிபொருள் என்ஜினுடன் கிடைக்கும் இத் செடான், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாகும். 6 ஏர்பேக்குகள், பின்புற ஏசி வென்ட்கள், 8 அங்குல தொடுதிரை உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. தனி டிக்கி வசதி இருப்பதால் நீண்ட பயணங்களுக்கும் ஏற்றது. இதன் விலை ரூ. 7.60 லட்சம் முதல் ரூ. 8.80 லட்சம் ஹூண்டாய் எக்ஸ்டர் ஐ சிஎன்ஜி - 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த மாடல், எஸ்யுவி போன்ற தோற்றத்துடன் வருகிறது. மின்சார சன்ரூப், இரட்டை கேமரா டாஷ்கேம், வயர்லெஸ் செல்போல் சார்ஜிங் உள்ளிட்ட பல நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ. 5.81 லட்சம் முதல் ரூ. 9.61 லட்சம்For those looking to buy CNG cars under ₹10 lakh...