நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன்: நடிகர் சிவராஜ்குமார்

Wait 5 sec.

நடிகர் சிவராஜ்குமார் விருது விழா நிகழ்வில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார். கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். இவர் நடித்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் என்பதால் ரசிகர்களின் விருப்பமான நடிகராகவும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இவருக்கான காட்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் தமிழ் சினிமாவிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். தற்போது, டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்த நிலையில், விருது விழா நிகழ்வில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், ”நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அனைத்து திரைப்படங்களையும் பார்த்துவிட்டேன். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரதீப்பின் ரசிகனாகிவிட்டேன். நடிகர் தனுஷைப் பிடிக்கும் என்பதால் பிரதீப் அவரைப் போலவே தோற்றமளிக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகை மமிதா பைஜூவை நாயகியாக வைத்து புதிய திரைப்படத்தைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசியல் வருகைக்கு ஆரம்பம் கொடுத்த வாசகத்துடன் முதல்வர் விஜய்!Actor Shiva Rajkumar spoke about actor Pradeep Ranganathan at an awards ceremony.