தில்லியில் வழிபாட்டுத் தலங்கள், முக்கிய காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டியதாக பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் பொறுப்பாளரான சாஷாத் பட்டி என்பவர், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் இந்தியாவுக்கு கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுப்தீப் சிங் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.இவரிடமிருந்த தானியங்கி துப்பாக்கி, தோட்டாக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர் பாகிஸ்தானின் ட்ரோன் ஆபரேட்டர்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவருடன் சேர்ந்து பணியாற்றியதாக குர்ஜந்த் சிங், சஜன்சிங், ககன்பிரீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்தும் நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள் நால்வரும் சேர்ந்து தில்லியின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்! கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு அரசுப் பணி?Delhi Police arrests four in ISI-sponsored terror and arms network crackdown