நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான “பெத்தி” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் “பெத்தி”. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், இப்படம் ரூ. 400 கோடி வரை வசூல் செய்ததாகப் படக்குழு அறிவித்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருந்தார். மேலும், நாயகி ஜான்வி கபூர் மிகவும் கவர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்ததை ஏற்று இயக்குநர் புச்சி பாபு மன்னிப்பு கோரினார்.இந்த நிலையில், பெத்தி திரைப்படம் வரும் ஜூலை 9 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா!actor Ram charan's Peddi movie ott release