கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 அணிகளின் விபரங்களை ஃபிஃபா வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 48 அணிகள் பங்கேற்று, தற்போது 16 அணிகளாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. தற்போது, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ளன. அடுத்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டிகள் இன்றுமுதல் தொடங்குகின்றன. கனடா, பிரேசில், பராகுவே, மொராக்கோ, நார்வே, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஸ்பெயின், போர்சுகல், ஸ்விட்சர்லாந்து, எகிப்து, ஆர்ஜென்டீனா, கொலம்பியா ஆகிய 16 அணிகள் இதுவரை தேர்வாகியுள்ளன.பராகுவே - பிரான்ஸ், கனடா - மொராக்கோ, போர்ச்சுகல் - ஸ்பெயின், அமெரிக்கா - பெல்ஜியம் ஆகிய அணிகள் ஒரு குரூப்பிலும் பிரேசில் - நார்வே, மெக்சிகோ - இங்கிலாந்து, ஆர்ஜென்டீனா - எகிப்து, ஸ்விட்சர்லாந்து - கொலம்பியா ஆகியவை மற்றுமொரு குரூப்பிலும் மோதவிருக்கின்றன. Bring on the Round of 16! #FIFAWorldCup #Qualified @mcdonalds pic.twitter.com/nceP5N3pbF— FIFA World Cup (@FIFAWorldCup) July 4, 2026The Round of 16 is set ✔️#FIFAWorldCup— FIFA World Cup (@FIFAWorldCup) July 4, 2026ஆஸ்திரேலியா செய்த முட்டாள்தனமான யுக்தி: பெனால்டி ஷூட் அவுட்டில் வென்ற எகிப்து!16/16: The 16 teams that qualified for the pre-quarterfinal round!