சட்டவிரோத செயல்களைத் தடுக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Wait 5 sec.

டெலிகிராம் மூலம் நிகழும் சட்டவிரோத செயல்களைத் தடுக்க அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு சனிக்கிழமை (ஜூலை 4) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டெலிகிராம் செயலியின் வழியாக திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் போன்றவை திருட்டுத்தனமான முறையில் வெளியிடப்படுவதாகவும் காப்புரிமை பெற்ற விடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பாதுகாப்பற்ற முறையில் பரப்பப்படுவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.ஆகையால், இந்த சட்டவிரோத செயல்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதுகுறித்த அறிக்கையை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெலிகிராம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஏற்கெனவே, கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள்கள் டெலிகிராம் வழியாக கசிந்தது உறுதி செய்யப்பட்டதால் நீட் மறுதேர்வு நாள் வரை அந்த செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.இந்த நிலையில் வினாத்தாள் கசிவு, ஆன்லைன் திருட்டு, பாலியல் ரீதியான குற்றங்கள், பங்குச்சந்தை அழைப்புகள் போன்ற குற்றங்கள் டெலிகிராம் வழியாக நடைபெறுவதாகவும் இதற்கான பாதுகாப்பு அம்சங்களை செயலியில் மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தது.தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!The Central Government sent a notice to Telegram on Saturday (July 4) to curb illegal activities taking place on the platform.