தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாளமுத்துநகா் தாய்நகா் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் மேரி ஜெமிதா தாளமுத்து நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டாா்.அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் சந்தோஷ்குமாா் (19), மணி மகன் அந்தோணி ஜெகன் (20), திரேஸ்புரம் டாா்வின் மகன் மரிய அந்தோணி ஆகாஷ் (19) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தாா்.