ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சாகசமும்... ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்த பயணம் அனுபவம்!

Wait 5 sec.

கேரள நடிகை ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்த தனது தாய்லாந்து பயணம் அனுபத்தில், “புகேட்டின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சாகசமும் பயணத்தை சிறப்பாக்கியது” எனக் கூறியுள்ளார்.பாசில் ஜோசப் இயக்கத்தில் 2021-ல் வெளியான மின்னல் முரளி படத்தில் நாயகியாக நடிகை ஃபெமினா ஜார்ஜ் அறிமுகமானார். 28 வயதாகும் இவர் இதற்கடுத்து மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், எந்தப் படமும் அவரது முதல் படம் அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக இவர் நடிப்பில் சுபாஷ் லலிதா சுப்ரமணியம் இயக்கத்தில் கரகம் எனும் படம் மே மாதம் வெளியானது. சுமாரன வரவேற்பையே பெற்ற இந்தப் படம் ஜூலை 3ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியானது.உடற்பயிற்சி மற்றும் பயணங்கள் செய்வதில் ஆர்வமான ஃபெமினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பயணங்கள் குறித்து பதிவிட்டு வருவார். இரண்டாவது முறையாக தாய்லாந்து நாட்டின் புகேட் நகருக்குச் சென்றது குறித்து அவர் கூறியிருப்பதாவது: படோங் கடற்கரை, யோனா கடற்கரை கிளப், டைகர் பார்க், பிக் புத்தா, ஏடிவி சவாரிகள், ஃபை ஃபை தீவுகள், கை நோக் தீவு, பழைய புகேட் டவுன் மற்றும் பல இடங்கள் இருக்கின்றன.புகேட் நமக்குத் தருவதற்கு நிறைய வைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் இரண்டாவது முறையாக அனுபவிப்பது அற்புதமானது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சாகசமும் ஒவ்வொரு சிறிய தருணங்களும் இந்தப் பயணத்தை சிறப்பானதாக மாற்றின. இந்தப் பயணத்தை மறக்க முடியாமல் இதையெல்லாம் அழகாக அமைத்துக்கொடுத்த வொண்டர்லெக்ஸ் கேராளவுக்கு நன்றி. அனைத்தையும் மிகவும் ரசித்தேன் எனக் கூறியுள்ளார். View this post on Instagram சர்தார் 2 பட கோன் வருவான் பாடலின் புரோமோ!Phuket has so much to offer says actress Femina George