கர்நாடகத்தில் குளத்தில் பதுங்கிய குற்றப் பின்னணி கொண்ட இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். கர்நாடக மாநிலம், பத்ராவதியைச் சேர்ந்த இளைஞர் திலீப் (என்ற) கரியா (19). இவர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகாததால், திலீப்புக்கு எதிராக மூன்று முறை பிணையில் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், போலீஸாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்தார். இந்த நிலையில் பத்ராவதி நியூ டவுன் போலீஸார், அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். போலீஸ் தன்னை நெருங்கியதை அறிந்த திலீப், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அருகில் இருந்த தண்ணீர் குளத்திற்குள் குதித்து ஒளிந்துகொள்ள முயன்றார். இருப்பினும், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர் பிரசன்னா ஆகிய இருவரும் உடனடியாக குளத்து நீரில் குதித்து அவரைப் மடக்கிப் பிடித்தனர். தற்போது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.A man with a criminal record who had spent a long time dodging the courts thought a pond in Karnataka's Shivamogga district would be his hiding place. Police had other plans.அடுத்த 2 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!