நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!

Wait 5 sec.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் சென்று வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையில், மரபணு மாதிரி சேகரிப்பு பணிகள் இன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரை ட்ராவல் ஏஜென்சி மூலம் 57 பேர் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 21 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 36 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. விபத்து நடைபெற்று 10 நாள்களுக்கு மேல் ஆன நிலையில் 36 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது.இதில் தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப உறவினர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். மருத்துவர் தமிழ்மணி தலைமையில் இந்த மாதிரி சேகரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது.இதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவம் மற்றும் நஞ்சியியல் துறை பிரிவில் இந்த பணிகள் நடைபெறுகிறது.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த மாதிரி சேகரிப்பில் உறவினர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்களுடைய மரபணு மாதிரிகளை கொடுக்கலாமென கூறப்பட்டுள்ளது.