அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது!

Wait 5 sec.

நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது.இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரைலர், தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.கிளாடியேட்டர்ஸ் டிரைலரை காண இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோரும் திரையரங்குக்கு வருகை தந்தனர்.அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார்.அரசியலுக்கு வருவேனா? நடிகர் ரவி மோகன் பதில்!Ajith Kumar's 'Gladiators' trailer has been released