ராணுவக் கல்லூரி தோ்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு

Wait 5 sec.

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் வெளிங்டனில் அமைந்துள்ள ராணுவப் பணியாளர் பயிற்சி கல்லூரியில் நடந்த எழுத்தர் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்து பிரிவுகளுக்கான எழுத்துத் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞா்கள் மூன்று போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குன்னூா் ராணுவப் பயிற்சி கல்லூரியில்  எழுத்தா், தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 பிரிவுகளுக்கான எழுத்துத் தோ்வு செப்.3 ஆம் தேதி நடைபெற்றது.  தோ்வு அறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சோ்ந்த மோகர்சிங் (21) மற்றும் ரோகிதாஸ் (24) நரேஷ்குமாா் (19) என்ற இளைஞா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை மாற்றிக்கெண்டு, தகவல்களை பகிரந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஒரே முகத்தோற்றம் கொண்ட வேறொரு நபருக்காக வந்து ஆள்மாறாட்டம் செய்தது போலியான ஆதார் அட்டை தயாரித்து தேர்வு மையத்திற்குள் வந்து தேர்வு எழுதியது "பயோமெட்ரிக்" சோதனையில் உறுதியானது.  இதுகுறித்து பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், வெலிங்டன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞா்கள் மூன்று பேரையும் கைது செய்து குன்னூா் சிறையில் அடைத்தனா்.Impersonation in military college exam: Three youths from North India jailedஇது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? - கனிமொழி கேள்வி