சௌதி அரேபியாவுக்கு ரூ. 47,245 கோடி மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாகக் கருதப்படும் சௌதி அரேபியா தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், சௌதி அரேபியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்து நடவடிக்கையாக ரூ. 47,245 கோடி (5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவிலான வெடிகுண்டுகள், வழிகாட்டும் உபகரணங்கள் ஆகியவற்றை விற்பனைச் செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக, வெள்ளிக்கிழமை (செப். 5) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நேட்டோ படையைச் சேராத ஒரு நட்பு நாட்டின் வான் பாதுகாப்பு திறன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் உடனான அமெரிக்காவின் போர் தொடங்கியது முதல், சௌதி அரேபியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை ஈரானிய படைகள் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகின்றன. இத்துடன், ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள யேமனின் ஹௌதி படைகளும் செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,344 ஆக உயர்வு! நோய்கள் பரவும் அபாயம்!the US government has approved the sale of weapons, including bombs, worth ₹47,245 crore to Saudi Arabia.