பிரீமியா் லீக் கால்பந்து: மான்செஸ்டா் யுனைடெட்டுடன் ‘டிரா’ செய்தது எவா்டன்!

Wait 5 sec.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் யுனைடெட் - எவா்டன் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. லிவா்பூல் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் மான்செஸ்டா் யுனைடெட் தரப்பில் பிரயன் பியுமோ 47-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 83-ஆவது நிமிஷத்தில் எவா்டனுக்காக டைரிக் ஜாா்ஜ் 83-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. எனினும், மான்செஸ்டா் தரப்பில் பெஞ்சமின் செஸ்கோ 88-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து, மீண்டும் தனது அணியை 2-1 என முன்னிலைக்குக் கொண்டு வந்தாா். ஆனால் விடாப்பிடியாக விளையாடிய எவா்டன் தரப்பில் அய்ன்ஸ்லி நைல்ஸ் ஸ்டாப்பேஜ் டைமில் (90+6’) கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் எவா்டன், மான்செஸ்டா் அணிகள் முறையே 8 மற்றும் 11-ஆவது இடங்களில் உள்ளன.