2நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.

Wait 5 sec.

புதுதில்லி: சுகாதாரம் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 'கைலாஷ் ஃபார்முலேஷன்' மற்றும் 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' ஆகிய நிறுவனங்களின் உரிமங்களை உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இடைநீக்கம் செய்தது.இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, ​​சுகாதாரம், தூய்மை மற்றும் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதால், இரு நிறுவனங்களின் உரிமங்களும் இடைநீக்கம் செய்ததாக ஆணையம் தெரிவித்தது.'கைலாஷ் ஃபார்முலேஷன்' நிறுவனத்தைப் பொறுத்தவரை, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும், நிறுவனத்தின் சுத்தம், சுகாதாரம் மற்றும் அதனை சார்ந்த வசதிகள் திருப்தியற்ற நிலையில் இருந்ததாக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்தது. அதே வேளையில், முறையான கை கழுவுதல், உடை, சுகாதார மாற்றும் பிற வசதிகள் இல்லாததும், அத்துடன் உணவு கையாளுபவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பதிவுகள் பராமரிக்காததும் குறைபாடுகளாக அமைந்ததாக தெரிவித்தது.பல்வேறு விதிமீறல்கள் காரணமாக, பொது சுகாதார நலன் கருதி 'கைலாஷ் ஃபார்முலேஷன்' நிறுவனத்தின் அனைத்து வணிகங்களுக்கான உரிமமும் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மற்றொரு நிறுவனமான, 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' பொறுத்தவரை, மோசமான சுகாதாரம், தூய்மை நிலை மற்றும் பூச்சிகள் உள்ளே வராமல் தடுப்பதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லாதது கண்டறியப்பட்டது.FSSAI has suspended licences of West Bengal-based companies, Kailash Formulation and Sanecure Water Project, for violation.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு!