பச்சிளம் குழந்தையின் உடலில் செலுத்தப்பட்ட ஊசி ஓர் ஆண்டுக்குப் பின் அகற்றம்: மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு!

Wait 5 sec.

கேரளத்தில் குழந்தையின் உடலில் செலுத்தப்பட்ட ஊசி ஓர் ஆண்டுக்குப் பின் அகற்றப்பட்ட குற்றச்சாட்டில் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரளத்தில் உள்ள கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அஞ்சு என்பவருக்கு ஜூன் 24, 2025 அன்று பெண் குழந்தை பிறந்தது. பிறந்த உடனேயே காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை பிரச்னை ஏற்பட்டதால் அந்தக் குழந்தையை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.அப்போது, குழந்தையின் உடலில் மருத்துவர்கள் ஊசியை செலுத்தியதாகவும், அதனை எடுக்காமல் விட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.ஓர் ஆண்டாக குழந்தையின் விலா எலும்பின் அருகே ஊசி இருந்த நிலையில், சமீபத்தில் அதனைக் கண்டறிந்து அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த ஜூலை 2026-ல் ஊசியை அகற்றியுள்ளனர்.இந்த நிலையில், பெற்றோரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் மீது கேரள குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் சிசிலி ஜோசப் வழக்குப் பதிவு செய்துள்ளார்.கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை மருத்துவமனை நியமித்துள்ளது. குழந்தையின் பெற்றோரிடம் குற்றச்சாட்டுகளை முழுமையாகக் கேட்டறிந்து அதனை விரிவாக ஆராயும் என அதிகாரிகள் தெரிவித்தனர். A case has been registered against a hospital in Kerala over allegations that a needle injected into a child's body was removed only after a year.கேரளம்: எஸ்எஃப்ஐ போராட்டத்தில் போலீஸார் தடியடி! கார்கேவுக்கு பினராயி விஜயன் கடிதம்!