நேபாள பெருவெள்ளத்தில் நுவாகோட் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 60 வயது பெண் 10 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மீட்புப்பணி தொடர்ந்த 11வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், மீட்புப்பணி நடைபெற்று வருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வீட்டின் மேல் தளத்தில் 60 வயதுடைய பெண் 10 நாள்களுக்குப் பிறகு மயக்கமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பிதுர் நகராட்சி-10 பகுதியில் ஒன்பது பேர் கொண்ட ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட ஷ்ரேஸ்தா, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அவர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்படுவார் என நேபாளப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.Nepal floods: Woman rescued alive after 10 days trapped in debris-buried houseஇந்துத்துவ ஆதரவாளர் பரத்வாஜுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!