தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய இளைஞருக்கு நெதர்லாந்து சூழலியலாளரிடமிருந்து அழைப்பு!

Wait 5 sec.

மாசுபட்டிருந்த அஜ்னர் ஆற்றை தனியொரு ஆளாக சுத்தப்படுத்திய இந்திய இளைஞருக்கு, நெதர்லாந்து சுற்றுச்சூழலியலாளரிடமிருந்து வேலைக்கான அழைப்பு வந்துள்ளது.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு சிங் என்ற 20 வயது பிஎஸ்சி படிக்கும் இளைஞர் தனியாளாக ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அஜ்னர் ஆற்றைச் சுத்தம் செய்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்தன.கடந்த ஒரு சில மாதங்களாக, தனியொரு ஆளாக, இந்த ஆற்றில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் பிட்டு. சுத்தப்படுத்துவதற்கு முந்தைய புகைப்படும், பிறகான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.ஆற்றைச் சுத்தம் செய்வதில் பல மாதங்களைச் செலவிட்ட இளைஞருக்கு, நெதர்லாந்து நாட்டுச் சூழலியலாளர் ஒருவரிடமிருந்து வேலைக்கான அழைப்பு வந்துள்ளது. அதில், வாருங்கள், எங்களுக்காக வந்து பணியாற்றுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். பிட்டு இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சிலரோ, இதுபோன்ற இளைஞர்களை இந்தியா இழந்துவிடக் கூடாது, இந்திய சுற்றுச்சூழல் அமைப்பு அல்லது மாநில அரசுகள் முன்வந்து இளைஞருக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.