நடிகர் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்கும் அறிவு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜயகுமார். தொடர்ந்து, உறியடி - 2 மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.அதன்பின், சில ஆண்டுகள் கழித்து ஃபைட் கிளப் என்கிற திரைப்படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜயகுமார் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு அறிவு எனப் பெயரிட்டுள்ளனர். கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். டி. இமான் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் நாளான இன்று அறிவு திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கருப்பு வெள்ளை போஸ்டரில் மலைவாழ் பெண்கள் இடம்பெற்றுள்ளதால் இப்படல் மலை கிராமங்களில் கல்வியைக் கொண்டு செல்லும் நாயகனின் கதையாக உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. மகனுக்காக பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிசில்டா!The poster for the film Arivu, starring actor Uriyadi Vijayakumar in the lead role, has been released.