ஆசிய கோப்பை: இந்தியா அபார பந்துவீச்சு; 55 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

Wait 5 sec.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் துபை சர்வதேச திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.இந்தியா அபார பந்துவீச்சு; 55 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்!பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 13 ரன்களும், ஷாவல் ஷுல்ஃபிகர் 14 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். தீப்தி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.In the match against India during the Asia Cup cricket tournament, the Pakistan team, batting first, was bowled out for 55 runs.மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக உழைக்கும் முகமது ஷமி: இஷான் கிஷன்