கள்ளக்குறிச்சி அருகே பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகள் விவேதா (17). இவா், அவரது பாட்டி சின்னம்மாள் வீட்டில் தங்கி, தலைவாசலில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாட்டி வீட்டில் விவேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.