கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,500 விவசாயிகள் தற்கொலை கொண்டதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.இதுகுறித்து சஞ்சய் ராவத் பேசியதாவது:பிரதமர் மோடி பொய் சொல்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். நேற்று மகாராஷ்டிரத்தில் ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளில் 7,500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது உங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் விளைவா? மகாராஷ்டிரத்தில் உள்ள ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்கரேவுக்கும், வங்காளத்தில் உள்ள மமதா பானர்ஜிக்கும் பிரதமர் மோடி அச்சப்படுகிறார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.VIDEO | On PM Modi's 'Naraaz Fufa' remark, Shiv Sena (UBT) MP Sanjay Raut (@rautsanjay61) says, "PM Modi is lying. He says that GDP has grown by 7.8%. Do you know that five farmers died by suicide in Maharashtra yesterday? In two years, 7,500 farmers have died by suicide. Is this… pic.twitter.com/BH6r9OOe8u— Press Trust of India (@PTI_News) September 6, 2026ம.பி.: கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி! Shiv Sena MP Sanjay Raut stated on Sunday (Sept. 6) that 7,500 farmers had committed suicide over the past two years.