எர்லிங் ஹாலண்ட் தனது கால்பந்து வரலாற்றில் 300 கோல்களை (கிளப் மற்றும் தேசிய அணிகள் சேர்த்து) நிறைவு செய்துள்ளார். எம்பாபே, ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என கோவென்ட்ரி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 26ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இந்த கோல் உடன் கிளப் மற்றும் தேசிய அணிகள் சேர்த்து தனது 300ஆவது கோலை நிறைவு செய்துள்ளார். எம்பாபே, ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எர்லிங் ஹாலண்ட் எட்டியுள்ளார். ஆனால், மெஸ்ஸி இவரை விட குறைவான போட்டிகளில் 300 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவேகமாக 300 கோல்கள் 1. லியோனல் மெஸ்ஸி - 365 போட்டிகள் 2. எர்லிங் ஹாலண்ட் - 384 போட்டிகள்3. கிளியன் எம்பாபே - 398 போட்டிகள் 4. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 499 போட்டிகள் View this post on Instagram மெஸ்ஸி அசிஸ்ட்: சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டத்தில் வெடித்த மோதல்! Erling Haaland outpaces Ronaldo, Mbappe to 300 club goals but not Messi