போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி சின்ன சவுடம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அழகேசன் மகன் நாகராஜ் (46) வீட்டில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நாகராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.