இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கௌர் 150-வது போட்டியில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியை 150-வது போட்டியில் கேப்டனாக வழிநடத்திய ஹர்மன்பிரீத் கௌர் அணிக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக இருந்தது. நேற்றையப் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகவும் சரியாக செயல்படுத்தினார்கள். , Harmanpreet Kaur becomes the first cricketer to captain a side in 1️⃣5️⃣0️⃣ T20Is. Updates ▶️ https://t.co/1WHHWPMe2o#TeamIndia | #WomensAsiaCup | @ImHarmanpreet pic.twitter.com/WrdFlp7kcH— BCCI Women (@BCCIWomen) September 5, 2026அணியில் உள்ள அனைவரும் நன்றாக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து விளையாடவுள்ள இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய அணியை 150 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்துவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், அவர்கள் அனைவரின் ஆதரவும் இல்லையென்றால், இது சாத்தியமில்லை என்றார்.Harmanpreet Kaur successfully led the Indian team in her 150th match as captain.மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக உழைக்கும் முகமது ஷமி: இஷான் கிஷன்