நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தியளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான களம்காவல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.பின், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. தற்போது, மட்டஞ்சேரி மாஃபியா என்கிற திரைப்படத்திலும் தனுஷ் - 55 படத்திலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில், மம்மூட்டி தயாரித்து நடித்துவரும் புதிய திரைப்படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு (செப். 7) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நிதேஷ் சகதேவ் இயக்குகிறார். ஓம் திரைப்படத்தின் நடிகர் மம்மூட்டி கிளிம்ஸ் அப்டேட்!An update has been released regarding the new film starring actor Mammootty.