தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

Wait 5 sec.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப். 6) தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கும். ஆனால், இந்த முறை நவ. 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் 60 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்கியது.நவ. 5 ஆம் தேதி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.மேலும், நவ.6 ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமை (செப்.7) காலை 8 மணிக்கும், நவ.7 ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.8) காலை 8 மணிக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.தீபாவளி: ரயில் முன்பதிவு தொடங்கியது!Ticket bookings for express trains departing from Chennai for the Diwali festival sold out within minutes of opening today (Sept. 6).