நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் கோன் வருவான் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள சர்தார் 2 திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகும் 100-வது திரைப்படம் என்பதால் இப்படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சாம் சிஎஸ் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், கோன் வருவான் என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஆஷிகா ரங்கநாத் இந்தப் பாடலை பாடியுள்ளதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை படத்தில் அலெக்சாண்டர் ஜாய், சுபலாஷினி பாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரிஸ் 3..! யாரெல்லாம் நடித்துள்ளார்கள்? Sardar 2 - Kon Varuvaan Promo Video Ft.Ashika