ஆசிரியர் நாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் அவர்களுக்கு, ”தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் செப். 5 ஆம் தேதி ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்! ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… pic.twitter.com/Gvx0TCnzPg— CMOTamilNadu (@CMOTamilnadu) September 5, 2026வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்: தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!Extending his wishes ahead of Teachers' Day, Chief Minister Vijay praised teachers as "distinguished educators who serve selflessly."