சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சனிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு நேரு வந்துள்ளார். சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் கட்சி நிதி(பார்ட்டி ஃபண்ட்) கேட்டு மிரட்டி வசூல் செய்ததாக வந்த குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே. என். நேரு, நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.800 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதாக வழக்கு மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எந்த வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு வீடுகளில் நடந்து வரும் அதிரடி சோதனை தமிழ்நாடு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. Anti-corruption police conduct surprise raids at premises linked to K.N. Nehru and his brotherவ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்: தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!