பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை! மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

Wait 5 sec.

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, அறிமுக நிகழ்ச்சி மேடையிலேயே போட்டியாளர் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற வேண்டும்.பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெறும்.வழக்கமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இம்முறை, அறிமுக நிகழ்ச்சியிலே போட்டியாளர்களை வெளியேற்றும் நிகழ்வு நடந்துள்ளது.நடிகைகள் லஷ்மிபிரியா, ஷாத்திகா, ஷப்னம் என மூவரிலிருந்து ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நிலையில், ஷாத்திகா, ஷப்னம் ஆகியோர் வெளியேற்றப்பட்டு, நடிகை லஷ்மிபிரியா பிக் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.அதேபோல, இம்முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இதன் மூலம் நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் 3 பேர் பங்கேற்கவுள்ளனர்.For the first time in the history of Bigg Boss, two contestants have been evicted right on the launch show stage.விரைவில் நிறைவடைகிறது புது வசந்தம் தொடர்!