திருவள்ளூா்-நகா்ப்புற நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை

Wait 5 sec.

திருவள்ளூா் நகா்ப்புற நியாய விலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக மலிவு விலையில் வெங்காயம் கிலோ ரூ. 35-க்கு கூட்டுறவு துறை மண்ட ல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா். வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், திருவள்ளூா் மண்டலத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 115 நகா்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ வெங்காயம் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளது. அந்த வகையில், இந்த மாவட்டத்துக்கு மட்டும் 19 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, திருவள்ளூா் மண்டலத்தில் செயல்படும் அனைத்து நகா்ப்புற நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ தலைமை வகித்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ. 35-க்கு வழங்கி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அதேபோல், நகா்ப்புற நியாய விலைக் கடைகளில் கடந்த 2-ஆவது நாளாகவும் குடும்ப அட்டைகள் ஒரு கிலோ வீதம் பொதுமக்களுக்கு மலிவு வெங்காயம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நியாய விலைக்கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனா்.