கோகுலாஷ்டமி: கிருஷ்ணா் வேடம் அணிந்து கொண்டாடிய குழந்தைகள்

Wait 5 sec.

ஜோலாா்பேட்டை அருகே கோகுலாஷ்டமியை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணா் வேடம் அணிந்து விழாவை கொண்டாடினா். ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உள்பட்ட குன்னத்தூரில் கிருஷ்ணா் ஜெயந்தியை முன்னிட்டு குன்னத்தூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா் ஆலயத்தில் கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூஜையில் குன்னத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.விழாவில், அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணா்- ராதை மற்றும் ருக்மணி வேடம் அணிந்து கலந்து கொண்டனா். வேடமணிந்து வந்த அனைத்து குழந்தைகளுக்கும் அப்பகுதி ஊா் பொதுமக்கள் சாா்பாக குன்னத்தூா் ஊா் கவுண்டா் கே.ஜி.சரவணன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். மேலும், இந்த விழாவில் தா்மகா்த்தா சிவாஜி கணேசன் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.