அடுத்தடுத்து கொலைகள்... தவெக அரசு என்ன செய்கிறது? கனிமொழி எம்பி கேள்வி!

Wait 5 sec.

நெல்லை – தென்காசி பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் தொடர்பாக தவெக அரசிடம் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.தென்காசியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள மக்களவை எம்பி கனிமொழி, “தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூரில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை–தென்காசி பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைகள், மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னதாக, நேற்று இரவு சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தவெக நிர்வாகி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள தென்காசி கொலை சம்பவத்தால் எதிர்க்கட்சியினர் தமிழக அரசின் சட்ட - ஒழுங்கு நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். MP Kanimozhi has questioned the TVK government regarding the series of murders taking place in the Nellai–Tenkasi region.குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்!