உ.பி.: படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறில், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் பலி

Wait 5 sec.

உத்தர பிரதேசத்தில் ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறில், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டதில் இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறைத் தொடர்ந்து, ராயா ரயில் நிலையத்திற்கு அருகே ஓடும் பயணிகள் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட 22 வயது இளைஞர் பலியானதாக ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஜதின், ஹத்ராஸ் நிலையத்திலிருந்து கஸ்கஞ்ச்-மதுரா பயணிகள் ரயிலில் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தபோது இந்தச் சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்ததாக ரயில்வே போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில், ராயா நிலையத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பாக ஜதினுக்கும் கஜேந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வாக்குவாதத்தில் ஜதினைக் கொலை செய்யும் நோக்கில் கஜேந்திரா அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ஜதின் பலியானார். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து கஜேந்திராவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஜதின் உடல் கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.A 22-year-old man died after being allegedly pushed from a moving passenger train near Raya railway station following a dispute over sitting on its footrest, the Government Railway Police (GRP) said on Sunday.ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி