தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அலுவலக இடமாற்றத்துக்கு இத்தனை கோடியா?

Wait 5 sec.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறை மாற்றம் செய்யப்படுவதற்கு ரூ. 6.17 ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.350 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம்மிக்க புனித ஜாா்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் முதல்வரின் அலுவலகம் அமைந்துள்ளது.இந்த நிலையில், இடப் பாற்றாக்குறை காரணமாக முதல்வரின் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது.முதல்வர் அலுவலகத்தின் புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டர் இறுதிசெய்யப்பட்டு, ரூ. 5.54 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. மேலும், பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ரூ. 3.78 கோடிக்கு டெண்டர்கோரி, ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டரை கைப்பற்றியது.இதனிடையே, தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றும் பணிக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.இதனையடுத்து, முதல்வர் அலுவலகத்தின் இட மாற்றத்துக்காக ரூ. 6.17 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக: உதயநிதி விமர்சனம்!Funds allocated for the relocation of CM Vijay's office at the Secretariat