கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து!

Wait 5 sec.

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வின்போது விமானப்படையின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேக்க நாட்டின் ஏதென்ஸுக்கு வடக்கே சனிக்கிழமை நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் விமானப்படையின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடியிருந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அடர்ந்த கருப்புகை கிளம்பியது. இருப்பினும், இதில் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டதாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்துக்கு முன் விமானிகள் பாராசூட் மூலம் வெளியேறினார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தரையில ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நீர் தெளிக்கும் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. தனக்ரா விமானப்படை தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.A Greek air force jet crashed at an aerial show north of Athens, sending plumes of black smoke into the air before several thousand spectators on Saturday.உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாள்கள் நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் உத்தரவு!