மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கடுமையாக உழைப்பதாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான முகமது ஷமி துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் ஈஸ்ட் ஸோன் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு துலீப் டிராபி தொடரில் சென்ட்ரல் ஸோன் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெடுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது அபார பந்துவீச்சு ஈஸ்ட் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவியது.இந்த நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக முகமது ஷமி கடுமையாக உழைப்பதாக ஈஸ்ட் ஸோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிகவும் சிறந்த பந்துவீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர் என நினைக்கிறேன். ஆட்டம் குறித்து அவருக்கு மிகுந்த அனுபவம் இருக்கிறது. பெங்கால் அணிக்காக விளையாட ஆரம்பித்ததிலிருந்தே அவர் நன்றாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார்.வயது குறித்து கருத்து தெரிவிப்பது மிகவும் கடினம் என நினைக்கிறேன். வயது என்பது வெறும் எண் மட்டுமே என நான் நினைக்கிறேன். அவர் கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தால், வயது என்பது பெரிய விஷயமல்ல. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற வேட்கை முகமது ஷமியிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் என்னைவிட கடுமையாக உழைக்கிறார் என்றார்.முகமது ஷமி கடைசியாக இந்திய அணிக்காக கடந்த 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.Ishan Kishan has stated that fast bowler Mohammed Shami is working hard to regain his place in the Indian team.இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!