மெஸ்ஸி அசிஸ்ட்: சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டத்தில் வெடித்த மோதல்!

Wait 5 sec.

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி நூலிழையில் தனது வெற்றியைத் தவறவிட்டது. இருப்பினும் போட்டி சமனில் முடிவடைந்தது. இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் அட்லாண்டா யுனைடெட் உடன் மோதியது. இந்தப் போட்டியில் 2-2 என சமனில் முடிவடைந்தது. இதில் இறுதியில் வீரர்கள் மோதிக்கொண்டார்கள்.இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 32ஆவது நிமிஷத்தில் அசிஸ்ட் செய்தார். அதனை காசிமெரோ கோலாக மாற்றினார். அடுத்து 45+1ஆவது நிமிஷத்தில் செகோவியா அசிஸ்ட்டில் லூயிஸ் சௌரஸ் கோல் அடித்தார்.அட்லாண்டா அணி சார்பில் 35ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. பின்னர் ஒரு பெனால்டியை தவறவிட்டாலும் 87ஆவது நிமிஷத்தில் கிடைத்த மற்றுமொரு பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார்கள். ஸ்டாப்பேஜ் நேரத்தில் லியோனம் மெஸ்ஸி ஃபைனல் தேர்டு பாக்ஸிற்குள் இரண்டு மூன்று முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. ஆனால், அட்லாண்டா அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் அவைகள் கோலாக மாறாமல் சென்றன. போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டார்கள். பெனால்டியில் மாற்றுக் கருத்துகள் இருந்தன. மெஸ்ஸியும் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸிதான் அதிகமான ரேட்டிங் பெற்றார். அவருக்குதான் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்படுமென ஆங்கில ஊடகங்கள் கருத்து தெரிவிக்கப்படுகின்றன. Messi to Casemiro for the @InterMiamiCF opener. Two-straight games with a goal for Casemiro. pic.twitter.com/NCJkMj5cZg— Major League Soccer (@MLS) September 6, 2026WOW! Insane team defense by @ATLUTD to deny Inter Miami the winner! pic.twitter.com/K9rN1ttYvE— Major League Soccer (@MLS) September 6, 2026புதிய நடைமுறையில் ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து லீக்! அக். 10-இல தொடக்கம்Messi's Assist: Clash Erupts During Inter Miami Match That Ended in a Draw!