சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 16 ஓவர்களில் 107/1 ரன்கள் எடுத்துள்ளது. தெற்கு மண்டல அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும் கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாகவும் விளையாடுகிறார்கள்.தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.தெற்கு அணியில் முகமது சிராஜ் இருக்கிறார். கிழக்கு அணியில் முகமது ஷமி இருக்கிறார். முதல் விக்கெட்டை ஹைதராபாதின் சாமா மிலிண்ட் எடுத்து அசத்தினார். நான்கு நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிக்கு அனுமதி இலவசம என டிஎன்சிஏ அறிவித்திருந்தது. இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் சேப்பாக்கம் திடலில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.East Zone won the toss and chose to bat first. Check out the line-ups for the Duleep Trophy Final! #TamilNaduCricket #TNCA #TNCricket pic.twitter.com/mOEOq27OxS— TNCA (@TNCACricket) September 6, 2026கேப்டனாக 150-வது போட்டி... ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் அபார வெற்றி!Duleep Trophy final East Zone cricket team selected to batting