சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷஃபாலி வர்மா புதிய சாதனை!

Wait 5 sec.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபை சர்வதேசத் திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார். ! 3️⃣0️⃣0️⃣0️⃣ T20I runs (and going strong) for Shafali Verma! Well played! Updates ▶️ https://t.co/1WHHWPMe2o#TeamIndia | #WomensAsiaCup pic.twitter.com/mbcM0zrIRM— BCCI Women (@BCCIWomen) September 5, 2026இதுவரை இந்திய அணிக்காக 114 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாலி வர்மா 3005 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 19 அரைசதங்கள் அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 81.பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.Indian opener Shafali Verma has set a new record in international T20 cricket.கேப்டனாக 150-வது போட்டி... ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் அபார வெற்றி!