நடிகர்கள் ஜெய், பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகிஸ்த நிறுவனமான ஏஜிஎஸ் கடந்த சில ஆண்டுகளாக நல்ல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. லவ் டுடே, டிராகன், பிளாஸ்ட் என வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள நிறுவனம் என்பதால் இவர்கள் அடுத்தடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தங்களுடைய 29-வது திரைப்படத்தை அறிவித்துள்ளது. எம். எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகர்கள் ஜெய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூச் இசையமைக்கிறார். ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக்கூடிய இப்படத்தில் பிரியங்கா மோகன் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. ராஜா சம்பவம்... டோரதி பின்னணி இசைகள் வெளியீடு! The announcement for a new film starring actors Jai and Priyanka Mohan has been released.