மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே காலகட்டத்தில் பதிவான மேலும் இரண்டு பலிகளை, இந்த கள்ளச்சாராய சம்பவத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்று அவர்கள் கூறினர். இருப்பினும், கள்ளச்சாராயம் குடித்ததால் 11 பேர் பலியானதாக உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார். பந்தா தொகுதி பாஜக எம்.எல்.ஏ வீரேந்திர லோதி கூறுகையில், "எனக்குத் தெரிந்தவரை, கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 25 பேர் பந்தா அரசு மருத்துவமனையில் இருந்து மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.சாகர் மாவட்ட ஆட்சியர் பிரதீபா பால் கூறுகையில், "உள்ளூர் மக்களுடனான உரையாடல்களின்படி, சட்டவிரோதமான கள்ளச்சாராயத்தை அருந்திய பிறகே இந்த பலி நிகழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. இரண்டு கிராமங்களிலும் மருத்துவப் பரிசோதனைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.தலைவலி மற்றும் வாந்தி போன்ற புகார்களைத் தொடர்ந்து மேலும் நான்கு முதல் ஐந்து பேர், அரசு நடத்தும் புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார். முதல் பலி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பதிவாகியுள்ளது. முதல் கட்ட கூராய்வு அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார். Nine persons died and some others fell ill after consuming spurious liquor in Madhya Pradesh's Sagar district on Sunday, officials said.மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ராகுல் காந்தி