மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் 7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (PMKVY), 2015-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, தொழிற்துறைக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதையும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இருப்பினும், இந்தத் திட்டத்தின் (ஆகஸ்ட் மாத நிலவரப்படி) மூலம் பயிற்சி பெற்ற 28.5 லட்சம் விண்ணப்பதாரர்களில் 2 லட்சம் பேர் (7.73%) மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.அதுமட்டுமின்றி, பயிற்சிக் காலத்திலேயே கணிசமான அளவில் பயிற்சி பெறுபவர்கள் விலகுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்த 35.4 லட்சம் விண்ணப்பதாரர்களில் சுமார் 6.83 லட்சம் பேர் (19%) பயிற்சிக் காலத்திலேயே விலகியுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் வேலை பெற்றவர்களைவிட, பயிற்சிக் காலத்தில் விலகியவர்களின் எண்ணிக்கை 3 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.விண்ணப்பித்து, பயிற்சி பெற்றவர்களுக்கு தொலைத் தொடர்புத் துறையில் (17.5%) அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து கைவினைத் துறை (14.4%), ஜவுளித் துறையும் (13.3%) வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.தனியார்மயம் இல்லை: இஸ்ரோ திட்டவட்டம்!PMKVY records just 7% placement rate, highlighting India’s skilling-employment gap