பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள்! 8 பேர் மேடையிலேயே வெளியேற்றம்!

Wait 5 sec.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர். 8 பேர் பிக் பாஸ் மேடையில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதிமுறைகளுடன் பிக் பாஸ் 10 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று (செப். 6) தொடங்கியது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் நேர்காணலில் தேர்வான போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் புதுமையை வெளிக்காட்டும் விதமாக மூன்று போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு, மேடையில் நிற்கவைக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரங்கத்தில் இருக்கும் மக்கள் மூவருக்கும் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்ற இருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் மேடையில் இருந்தவாறே வெளியேற்றப்படுகிறார். அதாவது, மற்ற சீசன்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை புதுமையாக, போட்டியாளர்கள் உள்ளே செல்வதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் மூன்று மூன்று நபர்களாக மேடையில் நிற்கவைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தி, அவற்றில் இருவர் தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்துள்ளனர். 8 பேர் மேடையிலேயே வெளியேற்றப்பட்டனர்.19 போட்டியாளர்கள்லஷ்மி பிரியாசாதிகா பிருத்விஜாவித்அஸ்மிதாமுத்தழகிஅவினாஷ்ஷாமாஜேசன்முனியம்மாள்பிளாக் பாண்டிவினோத் பாபுசாந்தினி தமிழரசன்ஸ்வானிகாகுமரன்ராகவ்தன்யாமுகேஷ்அடாவடி அன்சர் பிக் பாஸ் 10: போராடி வீட்டிற்குள் நுழைந்த 3 காமன்மேன்கள்!Bigg boss tamil starts 19 contestants in Bigg Boss 10 7 eliminated right from the stage