லஞ்ச ஒழிப்பு சோதனை! கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் கைப்பற்றப்பட்ட 241 ஆவணங்கள்

Wait 5 sec.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் 241 ஆவணங்களைக் கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கே.என். நேரு தொடர்பான 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணிவரையில் சோதனை நடத்தினர்.இந்த நிலையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் 241 ஆவணங்களும், மின்னணு சாட்சியங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.மேலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 1,020 கோடி டெண்டர் ஊழல் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் கே.என்.நேருவும், திமுகவும் அஞ்சிட மாட்டோம்: மு.க.ஸ்டாலின்241 documents were seized during raids conducted by the DVAC at premises linked to former DMK Minister K.N. Nehru