தீபாவளி: ரயில் முன்பதிவு தொடங்கியது!

Wait 5 sec.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) தொடங்கியது.தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கும். தற்போது, நவ. 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் 60 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, நவ. 5 ஆம் தேதி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்றும், நவ.6 ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமையும் (செப்.7), நவ.7-ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமையும் (செப்.8) முன்பதிவு செய்து கொள்ளலாம்.தீபாவளி பண்டிகை முடிந்தபின் ஊர் திரும்புவோர் செப்.10 ஆம் தேதி முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.லஞ்ச ஒழிப்பு சோதனை! கே.என். நேரு தொடர்புடைய 30 இடங்களில் கைப்பற்றப்பட்ட 241 ஆவணங்கள்!Ticket reservations for express trains departing from Chennai for the Diwali festival began on Sunday (Sept. 6).